செய்திகள்
கொரோனா வைரஸ்

தாம்பரத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா

Published On 2021-03-18 06:32 GMT   |   Update On 2021-03-18 06:32 GMT
கிழக்கு தாம்பரத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பள்ளி மூடப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தாம்பரம்:

கிழக்கு தாம்பரத்தில் அரசு உதவிபெறும் பள்ளி உள்ளது. இங்கு 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வந்தன.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு வந்த மாணவர்கள், ஆசிரியர்கள் சிலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் உடற்கல்வி ஆசிரியர், வேதியியல் ஆசிரியர், தமிழ் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் மேலும் 30 ஆசிரியர்கள், 50 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த முடிவுகள் இன்று வர உள்ளது.

மேலும் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து பள்ளி மூடப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Tags:    

Similar News