செய்திகள்
கேஎஸ் அழகிரி

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் காங்கிரசார் பட்டியல்- கே.எஸ்.அழகிரி வெளியிட்டார்

Published On 2021-02-13 09:03 GMT   |   Update On 2021-02-13 09:03 GMT
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி காங்கிரஸ் ஊடக துறை தலைவர் கோபண்ணா, பீட்டர் அல்போன்ஸ், உ.பலராமன், விஜய தரணி எம்.எல்.ஏ., சசிகாந்த், செந்தில், செல்வப்பெருந்தகை, பொன்.கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்கை வி.நாராயணன், இதாயத்துல்லா, சுதா ராமகிருஷ்ணன், லட்சுமி ராமச்சந்திரன், ஹசீனா சையத், இமயா கக்கன், ஜி.கே.முரளிதரன், கே.சந்திரசேகரன், ஜி.முருகையன், இனியன் ராபர்ட் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக பங்கேற்கலாம்.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள பெயர்களை தவிர, வேறு எவரையும் விவாதத்தில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். பாராளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களை விவாதங்களுக்கு தொலைக்காட்சி ஊடகங்களே அழைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News