செய்திகள்
பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை

தமிழக அரசின் பயிர் கடன் ரத்து அறிவிப்பை வரவேற்கிறோம்- அண்ணாமலை பேட்டி

Published On 2021-02-06 10:59 GMT   |   Update On 2021-02-06 10:59 GMT
கொரோனா மற்றும் புயல்களால் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ள சூழலில் தமிழக அரசின் பயிர்க்கடன் ரத்து அறிவிப்பை வரவேற்கிறோம் என்று பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை:

கோவை மாவட்டத்தில் உள்ள நஞ்சன்பதி மலை கிராமத்துக்கு பா.ஜனதா மாநில துணை தலைவர் அண்ணாமலை சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் நஞ்சன்பதியில் உள்ள சுமார் 50 குடும்பத்தினர் குடிசையில் வசித்து வருவதால் அவர்களுக்கு மின்சார வசதி கிடைக்கவில்லை.

மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு வருவதால் விரைவில் இவர்களுக்கு மின்சார வசதி கிடைக்கும். கொரோனா மற்றும் புயல்களால் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ள சூழலில் தமிழக அரசின் பயிர்க்கடன் ரத்து அறிவிப்பை வரவேற்கிறோம்.

காங்கிரஸ் ஜல்லிக்கட்டை எதிர்த்தது. ஆனால் ராகுல்காந்தி இப்போது தமிழர்கள் பெருமையை பேசுகிறார். கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் மாட்டு வண்டியில் பயணம் செய்கிறார். சிறிது நேரத்திலேயே தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். ராகுல்காந்தி அடிப்படையில் குழப்பவாத அரசியல் செய்து வருகிறார்.

பாரதிய ஜனதா இலங்கையில் தமிழர்களுக்கு 60 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. மீனவர்கள் படுகொலை முற்றிலுமாக குறைந்துள்ளது. அண்மையில் 4 மீனவர்கள் கொல்லப்பட்டபோது உடனடியாக சம்மன் அனுப்பி அவர்களது சடலங்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டன. மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News