செய்திகள்
மீனவர்கள்

ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

Published On 2021-02-03 04:53 GMT   |   Update On 2021-02-03 04:53 GMT
ராமேசுவரம் கடல் பகுதியில் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
ராமேசுவரம்:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்தது.

இந்த நிலையில் ராமேசுவரத்தில் நேற்று காலை திடீரென மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. கடல் பகுதியில் காற்றின் வேகமும் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல திட்டமிட்டனர். ஆனால் மீன்பிடி துறைமுக அலுவலகத்தில் அவர்களுக்கு டோக்கன் வழங்க மறுக்கப்பட்டது.

கடல் பகுதியில் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக மீன்பிடி டோக்கன் வழங்கும் அலுவலகம் தெரிவித்தது. இதனால் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

Tags:    

Similar News