செய்திகள்
இறைச்சி கடை

சென்னையில் 28-ந்தேதி அனைத்து இறைச்சி கடைகளையும் மூடவேண்டும்: மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

Published On 2021-01-23 02:09 GMT   |   Update On 2021-01-23 02:09 GMT
பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து இறைச்சி கடைகளும் வருகிற 28-ந்தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.
சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து இறைச்சி கடைகளும் வருகிற 28-ந்தேதி (வியாழக்கிழமை) வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.

இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே இறைச்சி கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் வியாபாரிகள் யாரும் இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம். இதற்கு வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News