செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்தது

Published On 2021-01-07 07:46 GMT   |   Update On 2021-01-07 07:46 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.38,440-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை சில நாட்களாக உயர்ந்தபடி இருந்து வந்தது. கடந்த 4-ந்தேதி தங்கம் பவுன் மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது.

கடந்த 3 நாட்களில் பவுனுக்கு ரூ.1,096 உயர்ந்தது. இதனால் நேற்று பவுன் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்தது. சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.38 ஆயிரத்து 440-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.4 ஆயிரத்து 805 ஆக உள்ளது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது வெள்ளி கிலோவுக்கு ரூ.1,030 குறைந்து ரூ.74 ஆயிரத்து 70 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.07-க்கு விற்கிறது.

கடந்த மாதம் தங்கம் விலை அதிரடியாக குறைந்து ரூ.38 ஆயிரத்துக்குள் வந்தது. அதன்பின் அந்த மாத இறுதியில் விலை உயர்ந்த வண்ணம் இருந்தது.

இதனால் பவுன் மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியதால் விலை மேலும் உயரும் என்ற கவலை நடுத்தர மக்களிடம் இருந்தது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து இருப்பது நடுத்தர, ஏழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Tags:    

Similar News