செய்திகள்
டிஆர் பாலு

கிராம சபை கூட்டத்துக்கு மக்கள் கூடுவதால் அ.தி.மு.க.வினர் அச்சம்- டி.ஆர்.பாலு பேட்டி

Published On 2021-01-01 09:44 GMT   |   Update On 2021-01-01 09:44 GMT
திமுக நடத்தும் கிராம சபை கூட்டத்துக்கு மக்கள் கூடுவதால் அதிமுகவினர் அச்சமடைந்துள்ளனர் என்று பொருளாளர் டி.ஆர்.பாலு கூறினார்.
திண்டுக்கல்:

தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் திண்டுக்கல்லில் அரசு ஊழியர்கள், வணிகர்கள், விவசாயிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு டி.ஆர்.பாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதே போன்று கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் மக்கள் சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் கடந்த முறையை விட தற்போது நடத்தப்படும் கூட்டங்களுக்கு 4 மடங்கு மக்கள் அதிகமாக வருகின்றனர்.

மக்கள் அதிக அளவு கூடுவதை பார்த்து அ.தி.மு.க.வினர் அச்சமடைந்துள்ளனர். இதனால்தான் கிராமசபை கூட்டத்தை தடுக்க முயற்சி எடுத்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் உள்ள அ.தி.மு.க. எந்த ஒரு பயனுள்ள திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அனைத்துமே காகித அளவில்தான் உள்ளன.

மக்கள் தி.மு.க.வுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். வரும் தேர்தலில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்டாலின் முதல்வராவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News