செய்திகள்
வழக்கு பதிவு

ஊரடங்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப்பதிவு

Published On 2020-09-29 04:37 GMT   |   Update On 2020-09-29 04:37 GMT
ஊரடங்கில் வேளாண் மசோதாவை எதிர்த்து திருப்பத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்பத்தூர்:

கொரோனா தொற்று பரவலால் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் வேளாண் மசோதாவை எதிர்த்தும், அதை ரத்து செய்யக்கோரியும், மத்திய, மாநில, அரசுகளை கண்டித்தும் திருப்பத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் போலீசார் அனுமதி மறுத்தனர்.

எனினும், திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் க.தேவராஜ், கதிர் ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நல்லதம்பி, வில்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. என்.கே.ஆர்.சூரியகுமார், நகர செயலாளர்கள் எஸ்.ராஜேந்திரன், சாரதிகுமார், ஆறுமுகம் ஆகியோர் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பலர் எனக் குறிப்பிட்டு அந்தந்தப் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News