செய்திகள்
கோப்பு படம்

சென்னையில் படிப்படியாக குறையும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - மாவட்ட வாரியாக விவரம்

Published On 2020-08-03 18:17 GMT   |   Update On 2020-08-03 18:35 GMT
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 56 ஆயிரத்து 698 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 609 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 63 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 56 ஆயிரத்து 698 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

குறிப்பாக சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.   

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 800 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 2 ஆயிரத்து 283 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 109 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 241 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

அரியலூர் - 189
செங்கல்பட்டு - 2,719
சென்னை - 11,983
கோவை - 1,695
கடலூர் - 1,520
தர்மபுரி - 224
திண்டுக்கல் - 529
ஈரோடு - 160
கள்ளக்குறிச்சி - 977
காஞ்சிபுரம் - 3,216
கன்னியாகுமரி - 2,075
கரூர் - 272
கிருஷ்ணகிரி - 539 
மதுரை - 2,411
நாகை - 355
நாமக்கல் - 351
நீலகிரி - 147
பெரம்பலூர் - 214
புதுக்கோட்டை - 845
ராமநாதபுரம் - 518
ராணிப்பேட்டை - 1,866
சேலம் - 1,146
சிவகங்கை - 405
தென்காசி - 1,129
தஞ்சாவூர் - 976
தேனி - 2,578
திருப்பத்தூர் - 466
திருவள்ளூர் - 3,409
திருவண்ணாமலை - 2,322
திருவாரூர் - 392
தூத்துக்குடி - 2,137
திருநெல்வேலி - 2,297
திருப்பூர் - 363
திருச்சி - 1,513
வேலூர் - 1,217
விழுப்புரம் - 818
விருதுநகர் - 2,402
விமானநிலைய கண்காணிப்பு 
வெளிநாடு - 156
உள்நாடு - 166
ரெயில் நிலைய கண்காணிப்பு - 1

மொத்தம் - 56,698
Tags:    

Similar News