செய்திகள்
பெண் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட துணை வட்டார வளர்ச்சி பெண் அதிகாரி உயிரிழப்பு

Published On 2020-07-26 02:21 GMT   |   Update On 2020-07-26 02:21 GMT
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கும்மிடிப்பூண்டி துணை வட்டார வளர்ச்சி பெண் அதிகாரி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (தணிக்கை) பணியாற்றி வந்தவர் சகுந்தலா (வயது 53). இவர், செங்குன்றம் அடுத்த சோழவரத்தில் குடும்பத்தோடு வசித்து வந்தார்

கடந்த 3-ந் தேதி இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதில் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து பல்வேறு நோய் பாதிப்பு காரணமாக அதே ஆஸ்பத்திரியிலேயே தங்கி தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் 21 நாட்கள் தனியார் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த கும்மிடிப்பூண்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சகுந்தலா, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதே போல கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த சாமிநாதன் (53) என்பவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 6-ந்தேதி சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரே மாதத்தில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை சேர்ந்த 2 அதிகாரிகள் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது அலுவலக ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News