செய்திகள்
திருத்தணி முருகன் கோவில்

திருத்தணி முருகன் கோவில்- ஆடிக்கிருத்திகை விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Published On 2020-07-18 17:29 GMT   |   Update On 2020-07-18 17:29 GMT
திருத்தணி முருகன் கோவில் ஆடிக்கிருத்திகை விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவள்ளூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் ஆகஸ்ட் 12ந்தேதி ஆடிக்கிருத்திகை விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆடிக்கிருத்திகை விழா யூ டியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News