செய்திகள்
முககவசம் வழங்கிய போது எடுத்த படம்.

வாகன ஓட்டிகள், பொதுமக்கள் முககவசம் அணிந்து வர வேண்டும்- துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

Published On 2020-07-12 08:37 GMT   |   Update On 2020-07-12 08:37 GMT
கிருஷ்ணகிரி நகரில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் முககவசம் அணிந்து அவசிய தேவைக்கு மட்டும் வெளியே வர வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறினார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல்துறை சார்பில் 5 ரோடு ரவுண்டானா பகுதியில் பொதுமக்களுக்கு முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் சானிடைசர்களை வழங்கி பேசினார். இதில் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசின் வழிக்காட்டுதல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக நகரில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் முக கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். சமூக இடைவெளியை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

வாகன ஓட்டிகள் ஹெல்மெட், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, மக்கள் கூட்டமாக செல்லாமல் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தினார். முன்னதாக ரவுண்டானா வழியாக சென்ற அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்த பணியை துணை போலீஸ் சூப்பிரண்டு நேரில் பார்வையிட்டார்.
Tags:    

Similar News