செய்திகள்
குடிநீர் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தங்கப்பாண்டியன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

24 மணி நேரமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை- தங்கப்பாண்டியன் எம்எல்ஏ தகவல்

Published On 2020-07-07 13:49 GMT   |   Update On 2020-07-07 13:49 GMT
ராஜபாளையம் தொகுதியிலுள்ள 25 ஊராட்சிகளிலும் 24 மணி நேரமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் தொகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக வேதநாயகபுரம் கிராம பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து புத்தூர் ஊராட்சி வேதநாயகபுரம் கிராமத்தில் ரூ.2½ லட்சம் மதிப்பில் புதிய போர்வெல் அமைக்கப்பட்டு சிறிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

ராஜபாளையம் நகரில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தண்ணீர் வழங்க அம்ரூத் திட்டத்தின் கீழ் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் ராஜபாளையம் தொகுதியிலுள்ள 25 ஊராட்சிகளிலும் 24 மணி நேரமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

இந்தநிகழ்ச்சியில் கவுன்சிலர் நவமணி, கிளை செயலாளர் மாணிக்கராஜ், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News