செய்திகள்
வங்கி அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு பேசியபோது எடுத்தபடம்.

முககவசம் அணிந்து வந்தால் மட்டுமே வங்கிக்குள் அனுமதி

Published On 2020-07-03 09:15 GMT   |   Update On 2020-07-03 09:15 GMT
வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். முக கவசம் அணியாத நபர்களை வங்கிக்குள் அனுமதிக்க கூடாது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் வங்கிகளில், வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதிலும் ஓய்வூதியம் பெறும் ஊழியர்கள், அரசின் உதவித்தொகை பெறும் முதியவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. எனவே, வங்கிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து, திண்டுக்கல்லில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தலைமை தாங்கினார். இதில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். முககவசம் அணியாத நபர்களை வங்கிக்குள் அனுமதிக்க கூடாது. மேலும் கைகளை சுத்தம் செய்வதற்கு கிருமிநாசினி மருந்து வழங்க வேண்டும். இதுதவிர அனைவரையும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், மாதத்தின் தொடக்கத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வங்கி ஊழியர்கள், காவலாளி ஆகியோரால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, வங்கிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரை நியமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News