செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

கொரோனா பாதிப்பு உயர்ந்துதான் மெல்ல மெல்ல குறையும்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published On 2020-05-13 08:11 GMT   |   Update On 2020-05-13 08:29 GMT
கொரோனா பாதிப்பு அதிகமாகிதான் குறையும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசு துணை நிற்கிறது என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சென்னை:

கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கொரோனா நோய் தடுப்பு பணியில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், துறை செயலாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீஸ் அதிகாரிகள், வருவாய், கூட்டுறவுத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயலாற்றி வருவதால் தமிழ்நாட்டில் நோய் பரவுவதை தடுக்கும் முயற்சியில் வெற்றி கண்டு உள்ளோம்.

கொரோனா தொற்றை கண்டறிய அதிகமாக தமிழகத்தில் பரிசோதனை செய்து வருகிறோம். இந்தியாவிலேயே அதிகளவு பரிசோதனை செய்யும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். அந்த அளவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதே போல் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில்தான் குறைவாக உள்ளது. இறப்பு சதவீதம் 0.67 சதவீதமாக உள்ளது. அந்த வகையில் இறப்பையும் குறைத்துள்ளோம்.

கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் அதிகமாக இருப்பதற்கு காரணம் பரிசோதனையை அதிகரித்து இருக்கிறோம். மற்ற மாநிலங்களில இந்த அளவு பரிசோதனை செய்யவில்லை. எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை. கொரோனா பாதிப்பு அதிகமாகிதான் குறையும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசு துணை நிற்கிறது. அவர்களுக்கு அனைத்து சிகிச்சைகளையும் வழங்குகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News