செய்திகள்
வாகனத்தில் சென்றவர்களை பிடித்து உறுதி மொழி எடுக்க வைத்த போது எடுத்தபடம்

தடையை மீறி வாகனத்தில் சென்றவர்களை பிடித்து உறுதி மொழி எடுக்க வைத்த டி.எஸ்.பி

Published On 2020-03-31 07:50 GMT   |   Update On 2020-03-31 07:50 GMT
கபிஸ்தலம் பகுதியில் தடையை மீறி வாகனத்தில் சென்றவர்களை பிடித்து டி.எஸ்.பி உறுதி மொழி எடுக்க வைத்துள்ளார்.
கபிஸ்தலம்:

தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கபிஸ்தலம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டு வாகனங்களில் செல்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாக காணப்பட்டது. இந்த நிலையில் கபிஸ்தலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களும், வாலிபர்களும் அதிக அளவில் சென்றனர்.

இதனை பார்த்த ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பாபநாசம் டி.எஸ்.பி நந்தகோபால் கபிஸ்தலம் பாலக்கரையில் நின்று அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை மறித்து வரிசையில் நிறுத்தினார். அவர்களுக்கு உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி பயிற்சி அளித்து அத்தியாவசிய தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வெளியே வரமாட்டோம் என உறுதி கூறிய பின்னர் அனுப்பி வைத்தார். இதில் கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News