செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டன

Published On 2020-03-25 07:21 GMT   |   Update On 2020-03-25 07:20 GMT
சென்னையில் 38 பெரிய மேம்பாலங்களும், 75 சிறிய மேம்பாலங்களும் உள்ளன. வாகன போக்குவரத்தை முழுமையாக நிறுத்தும் வகையில் அந்த பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
சென்னை:

சென்னையில் ஊரடங்கு உத்தரவை மீறி இன்று காலை சில இடங்களில் பலர் இருசக்கர வாகனங்களில் வெளியில் வந்தனர்.

இதையடுத்து வாகன போக்குவரத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதற்காக போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.

சென்னையில் 38 பெரிய மேம்பாலங்களும், 75 சிறிய மேம்பாலங்களும் உள்ளன. வாகன போக்குவரத்தை முழுமையாக நிறுத்தும் வகையில் அந்த பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்கள் வந்தால் மட்டும் மேம்பாலங்கள் திறந்து விடப்படுகின்றன. இரவு முழுமையாக மேம்பாலங்களை மூடி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தவிர அனைத்து முக்கிய சாலைகளிலும் போலீசார் நேற்று இரவே தடுப்புகளை அமைத்தனர். இதனால் அத்தியாவசிய வாகனங்களும் மெல்ல இயங்கும் நிலை ஏற்பட்டது.

மேலும் போலீசார் முக்கிய சாலை சந்திப்புகளில் முகாமிட்டு கண்காணித்து வருகிறார்கள். தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கடுமையாக எச்சரித்து அனுப்பப்படுகிறார்கள்.
Tags:    

Similar News