செய்திகள்
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற காட்சி.

லால்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி- விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

Published On 2020-02-16 15:04 GMT   |   Update On 2020-02-16 15:04 GMT
திருச்சி மாவட்டம் லால்குடியில் இன்று நடைபெற்ற ஜல்லிக் கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.
லால்குடி:

திருச்சி மாவட்டம் லால்குடி மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்  சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அமைச்சர் வளர்மதி, அ.தி.மு.க. திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி, ஆர்.டி. ஓ. ராமன், லால்குடி ஒன்றிய செயலாளர்  சூப்பர் டி. என்.டி.நடேசன்,  ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

போட்டியில் சுமார் 600 காளைகள் பங்கேற்றன. 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளையும் இந்த போட்டியில் பங்கேற்றது. சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் பலர் துணிச்சலுடன் அடக்கினர். 

கொம்பன் உள்ளிட்ட சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் பாய்ந்து சென்றன. போட்டியை திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர். மருத்துவக்குழுவினர் அங்கு முகாமிட்டிருந்தனர். காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. 

போட்டியையொட்டி லால்குடி டி.எஸ்.பி. ராஜ சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News