செய்திகள்
கோப்பு படம்

விளையாட்டு விபரீதமானது - தூக்குப்போடுவது எப்படி? நடத்தி காட்டிய புதுமாப்பிள்ளை பலி

Published On 2020-01-28 12:12 GMT   |   Update On 2020-01-28 12:12 GMT
நகைச்சுவைக்காக தூக்குப்போடுவது எப்படி? என செய்து காண்பித்த போது புதுமாப்பிள்ளையின் கழுத்தை கயிறு இறுக்கியதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
மதுரை:

மதுரை சோலையழகுபுரம், 1-வது தெருவைச் சேர்ந்தவர் அகமது ஷெரீப். இவரது மகன் முகமது அலி (வயது 22). லாரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சந்தோ‌ஷமாக திருமண வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் முகமது அலி, தனது மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது நகைச்சுவைக்காக வீட்டில் இருந்த கயிற்றை எடுத்து தூக்குப்போடுவது எப்படி? என மனைவியிடம் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்ததாக தெரிகிறது.

விளையாட்டாக இதனை முகமது அலி செய்து கொண்டிருந்தபோது நாற்காலி தவறி கீழே விழுந்தது. அப்போது எதிர்பாராத வகையில், முகமது அலி தனது கழுத்தில் மாட்டியிருந்த கயிறு இறுக்கியது. இதனால் அவர் துடித்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி கூக்குரலிடவே, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து முகமது அலியை மீட்டனர். உயிருக்கு போராடிய அவரை உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே முகமது அலி பரிதாபமாக இறந்தார். விளையாட்டாக செய்த சம்பவத்தால் திருமணமான 2 மாதத்திலேயே புது மாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்ளபடுத்தியது.
Tags:    

Similar News