search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுமாப்பிள்ளை பலி"

    • உதயகுமார் (வயது 23). இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது,மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ,சைக்கிளில் இருந்து உதயகுமார் தானாகவே தவறி கீழே விழுந்தார்.
    • . இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடினார்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள சடைக்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்முருகன்.இவரது மகன் உதயகுமார் (வயது 23). இவருக்கு கடந்த சுமார் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி நந்தினி என்கிற மனைவி உள்ளார். நந்தினி தற்போது 4மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் உதயகுமார் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்கு உள்ள பாபா கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் மோட்டார் சைக்கிளில் இருந்து உதயகுமார் தானாகவே தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டு உயிருக்கு போராடினார்

      அப்போது அங்கு வந்து அவரது நண்பர் முனியன் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உதயகுமாரை காப்பாற்றி திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். விபத்தகுறித்து தகவல் அறிந்தவுடன் மணலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் உதயகுமார் இறந்த சம்பவமும், அவரது மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதும் கிராம மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இறந்து போன உதயகுமாரின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானம் செய்வதாக அறிவித்துவிட்டனர்.

    • அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டு சிகிச்சை சரியான முறையில் அளிக்காமல் கவன குறைவால் உதயகுமார் இறந்ததாக கூறி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து ஏராளமான போலீசார் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 27). அவரது மனைவி மனிஷா. இவர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமண நாளில் இருந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். மேலும் உதயகுமார் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல இருந்தார்.

    இந்த நிலையில் உதயகுமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 8-ந்தேதி அறுவை சிகிச்சை செய்வதற்காக சேர்க்கப்பட்டார். நேற்று (10 ந் தேதி) காலை உதயகுமாருக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

    இன்று (11-ந் தேதி) அதிகாலை உதயகுமாருக்கு திடீரென்று உடல்நிலை மோசமாகி அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 100-க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு திரண்டனர். பின்னர் அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டு சிகிச்சை சரியான முறையில் அளிக்காமல் கவன குறைவால் உதயகுமார் இறந்ததாக கூறி முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏராளமான போலீசார் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வக்கீல் சிவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் கூறுகையில், தற்போது உதயகுமாருக்கு 27 வயது ஆகியுள்ளது. இரணைய ஆபரேஷன் செய்த உதயகுமார் ஹார்ட் அட்டாக்கால் இறந்ததாக கூறப்படுகிறது.

    இந்த வயதில் இது போன்ற நிகழ்வு ஏற்படுமா? ஆகையால் உதயகுமாருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் செவிலியர்களின் கவனக்குறைவால் அவர் இறந்து உள்ளார். மேலும் இவரது இறப்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

    மேலும் இவரது பிரேத பரிசோதனை கடலூர் அரசு மருத்துவமனையில் பண்ணாமல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் அங்கு பிரேத பரிசோதனை செய்யும் போது வீடியோ பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை ஏற்றுக்கொண்டால் எங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் இவர்களின் கோரிக்கையை ஏற்றதை தொடர்ந்து இறந்த உதயகுமார் மனைவி மனிஷா, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்ததன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • புதுமணத்தம்பதி தனித்தனியாக குதிரையில் மாதேரான் மலை அழகை சுற்றிப்பார்த்து கொண்டு இருந்தனர்.
    • வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    மும்பை:

    மகாராஷ்டிர தலைநகர் மும்பை முகமது அலி ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது காசிப் இம்தியாஸ் சேக் (வயது23). இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தனது மனைவியுடன் மும்பை அருகே உள்ள மாதேரான் மலை வாசஸ்தலத்துக்கு தேனிலவுக்கு சென்றார்.

    சம்பவத்தன்று புதுமணத்தம்பதி தனித்தனியாக குதிரையில் மாதேரான் மலை அழகை சுற்றிப்பார்த்து கொண்டு இருந்தனர்.

    முகமது காசிப் இம்தியாஸ் சேக் சென்ற குதிரை திடீரென வேகமாக ஓடத் தொடங்கியது. இதனால் அவர் நிலைதடுமாறி குதிரையில் இருந்து கீழே விழுந்தார். வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

    தேனிலவு சென்ற இடத்தில் புதுமாப்பிள்ளை குதிரையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
    • குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த குமாரபாளையம் பகுதியில் ஏராளமான கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் அருள்குமார் (வயது 33) என்பவரும் கோழிப்பண்ணை வைத்து உள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு திருமணம் நடந்தது.

    நேற்று அருள்குமார் வழக்கம்போல் பண்ணைக்கு வேலைக்கு வந்தார். அங்கு விவசாய பணிகளை முடித்து விட்டு கை கழுவுவதற்காக சின்னஆறுவ செட்டியார் தோட்டத்தில் உள்ள பண்ணைக்குட்டைக்கு சென்றார்.

    அப்போது எதிர்பாரா தவிதமாக நிலை தடுமாறி அவர் குட்டையில் தவறி விழுந்தார். நீரில் விழுந்த அவர் மூச்சுத்திணறி குட்டையிலேயே உயிரி ழந்தார்.

    தோட்டத்துக்கு சென்றவர் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரை தேடி குடும்பத்தினர் சென்றனர். அங்கு குட்டையில் விழுந்து அருள்குமார் இறந்து கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் குட்டையில் இறங்கி அருள்குமாரின் பிணத்தை மீட்டனர்.

    இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆன 6 மாதத்தில் அருள்குமார் இறந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • காலையில் வீட்டில் இருந்த ஜெகதீஷ் எதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார் என்பது தெரியவில்லை.
    • ஜெகதீஷை யாரேனும் அழைத்து சென்றார்களா? என சந்தேகம் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உறவினர்கள் கூறினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முள்ளக்காடு அருகே உள்ள பொட்டல்காட்டை சேர்ந்தவர் மாரியப்பன். உப்பள தொழிலாளி. இவரது மகன் ஜெகதீஷ் (வயது26). இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    இந்நிலையில் இவருக்கும் பழையகாயல் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. இன்று காலை 6 மணிக்கு வீட்டில் இருந்த ஜெகதீஷ் திருமணத்திற்கு தயாராகி கொண்டிருந்தார்.

    அப்போது அவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

    சிறிதுநேரத்தில் தூத்துக்குடி துறைமுகம் புறவழிச்சாலை உப்பாற்று பாலம் ஓடை அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தங்கராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து ஜெகதீஷ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே ஜெகதீஷ் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, காலையில் வீட்டில் இருந்த ஜெகதீஷ் எதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார் என்பது தெரியவில்லை. அவரை யாரேனும் அழைத்து சென்றார்களா? என சந்தேகம் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறினர்.

    • கிறிஸ்டியன் டேனியல் சென்னையில் உள்ள தனது நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக நேற்று நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.
    • புதுமாப்பிள்ளை பலியானது குறித்து தகவல் அறிந்ததும் பெண் வீட்டார் மற்றும் கிறிஸ்டியன் டேனியலின் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். இவரது மகன் கிறிஸ்டியன் டேனியல் (வயது 25), என்ஜினீயர்.

    இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்து அடுத்த மாதம் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்காக திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. கிறிஸ்டியன் டேனியல் சென்னையில் உள்ள தனது நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக நேற்று நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.

    மதுரை அருகே தேனூர் பகுதியில் ரெயில் சென்று கொண்டிருந்தபோது கிறிஸ்டியன் டேனியல் சாப்பிட்டு விட்டு கை கழுவுவதற்காக வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிறிஸ்டியன் டேனியல் ரெயிலில் இருந்து தவறி விழுந்தார். இதை பார்த்த சக பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மதுரை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு கிறிஸ்டியன் டேனியல் பிணமாக கிடந்தார்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கிறிஸ்டியன் டேனியல் பலியானது குறித்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இங்கிருந்து மதுரைக்கு சென்றனர்.

    புதுமாப்பிள்ளை பலியானது குறித்து தகவல் அறிந்ததும் பெண் வீட்டார் மற்றும் கிறிஸ்டியன் டேனியலின் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பலியான கிறிஸ்டியன் டேனியலின் உடல் பிரேத பரிசோதனை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.

    ×