செய்திகள்
வேல்முருகன்

பெரியார் குறித்த கருத்துக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்- வேல்முருகன் பேட்டி

Published On 2020-01-23 11:05 GMT   |   Update On 2020-01-23 11:05 GMT
பெரியார் குறித்த கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

அருப்புக்கோட்டை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் பரோலில் வந்துள்ளார். அருப்புக் கோட்டையில் தாயாருடன் அவர் தங்கியுள்ளார். அவரை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சந்தித்தார். இதனை தொடர்ந்து வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக சிறையில் வாடி வருகின்ற ரவிச்சந்திரன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார்.

பாரதீய ஜனதா கட்சிக்கு தமிழர்கள் என்றாலே கிள்ளு கீரையாக தெரிகிறது. சஞ்சய்தத் வழக்கில் அவரை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இவர்களை வைத்து காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் அரசியல் செய்து வருகின்றனர். தமிழ் சமூகம் மிகப் பெரிய துன்பங்கள், துயரங்களை சந்தித்தபோது குரல் கொடுக்காத நடிகர் ரஜினிகாந்த் இதில் வாய் திறக்க மறுக்கிறார்.

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்களும், ஜனநாயக சக்திகளும், மதச்சார்பின்மை சக்திகள், எதிர்கட்சிகள், மாணவர்கள். மிக பேரிய போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இதை மறை மாற்றம் செய்ய வேண்டும் என்பதக்காக அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். கொடுத்த வேலையை ரஜினிகாந்த் தவறான கருத்தை சொல்லி திசை திருப்பி உள்ளார்.

இதனை தமிழ் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

கச்சத்தீவு, ஜி.எஸ்.டி.வரி, நீட்,என்.ஆர்.சி. போன்ற எண்ணற்ற பிரச்சினை களுக்கு கருத்து சொல்ல வில்லை. தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வர மாநில அரசின் அனுமதியும், விவசாயிகளின் அனுமதி தேவையில்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியை துரிதப் படுத்தி விவசாய நிலத்தை கையகப்படுத்துவோம் என்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர். விவசாயிகள் நலன் பாதிக்கப்படுவது தொடர்பாக இது நாள்வரை ரஜினிகாந்த் கருத்து எதுவும் சொல்ல வில்லை.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடக்காத சம்பவத்தை நடந்ததாக கூறி அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் ஆர்.எஸ்.எஸ். கொடுக்கின்ற அஜண்டாவை தெரியப்படுத்தி இருக்கிறார்.

பெரியார் குறித்த கருத்துக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News