செய்திகள்
பலியான கல்லூரி மாணவர்

மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி - கண்கள் தானமாக வழங்கப்பட்டது

Published On 2020-01-23 09:43 GMT   |   Update On 2020-01-23 09:43 GMT
போரூர் அருகே பஸ் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் பலியான கல்லூரி மாணவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
போரூர்:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவரது மகன் ‌ஷரவணன் (வயது 18). காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார்.

கடந்த 16-ந் தேதி அவர் சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார்.

17-ந் தேதி இரவு பெட்ரோல் வாங்குவதற்காக உறவினர் தர்‌ஷன்குமார் என்பவரை அழைத்து கொண்டு ‌ஷரவணன் மோட்டார் சைக்கிளில் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

காளியம்மன் கோவில் தெரு கோயம்பேடு மார்கெட் “ஏ” ரோடு சந்திப்பு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது வேகமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட ‌ஷரவணனின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ‌ஷரவணன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ‌ஷரவணன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். ‌ஷரவணனின் கண்களை அவரது பெற்றோர் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கினர்.

விபத்து நடந்த 17-ந் தேதி ‌ஷரவணனின் 18-வது பிறந்த நாள் ஆகும். பிறந்த நாள் அன்றுஅவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பலியான ‌ஷரவணன் பிரபல சினிமா சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினத்துக்கு பேரன் முறை உறவினர் ஆவார்.
Tags:    

Similar News