செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் செல்லூர் ராஜூ

சாலை விபத்தை குறைக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம் - அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2020-01-21 10:13 GMT   |   Update On 2020-01-21 10:13 GMT
சாலை விபத்துக்களை குறைக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை:

தமிழகத்தில் சாலை பாதுகாப்பு வார விழா வருகிற 27-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை தெப்பக்குளம் பகுதியில் இன்று காலை சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு பேரணி நடந்தது.

மாவட்ட கலெக்டர் வினய், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த பேரணியில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.



31-வது சாலை பாதுகாப்பு வார விழா 20-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. சாலை பாதுகாப்பினை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு நாளும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

மக்கள் சாலைகளில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்லும்போது போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டத்தால் மட்டும் எதையும் மாற்றிவிட முடியாது.

தலைக்கவசம் அணிந்து மற்றும் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் மூலம் விபத்தை குறைக்கலாம். கடந்த 2018-ம் ஆண்டு 2,739 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். 19-ம் ஆண்டில் 2,563 பேர் இறந்துள்ளனர்.

கடந்த ஆண்டு இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இன்னும் அதிகமாக விபத்துக்கள் குறைக்கப்பட வேண்டும்.

இளைஞர்கள், மாணவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும். அதிக வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

சாலை விபத்தில் எனது குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சொல்கிறேன், இளைஞர்கள் தான் இந்த நாட்டின் எதிர்காலம். எனவே போக்குவரத்து வதிகளை கடைபிடித்து நாட்டுக்கும், வீட்டுக்கும் பயன்பெறும் வகையில் இளைய சமுதாயத்தினர் சாலைகளில் பயணம் செய்ய வேண்டும்.

கூட்டுறவுத்துறை ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி செய்து வருகிறது. சுமார் 1,700 கோடி வரை சிறு, குறு வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கூட்டுறவுத்துறை மூலம் பொதுமக்களுக்கு தலைக்கவசம் வழங்குவது சாத்தியமில்லாதது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், பரவை ராஜா, சண்முகவள்ளி, சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News