செய்திகள்
கோப்பு படம்

ஆன்-லைன் வர்த்தகம் செய்வதாக வாலிபரிடம் பண மோசடி - பெண் உள்பட 4 பேர் மீது புகார்

Published On 2020-01-04 15:23 GMT   |   Update On 2020-01-04 15:23 GMT
கோடம்பாக்கத்தில் ஆன்-லைன் வர்த்தகம் செய்வதாக வாலிபரிடம் பண மோசடி செய்த பெண் உள்பட 4 பேர் மீது போலீசார் புகார் அளித்துள்ளனர்.
போரூர்:

கோடம்பாக்கம் வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவர் வடபழனி குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார் அதில் கூறியிருப்பதாவது:-

நான் வருடத்திற்கு ஒரு முறை விடுமுறையில் சென்னைக்கு வந்து செல்வேன்.

கடந்த ஆகஸ்டு மாதம் சென்னைக்கு வந்தபோது எனது செல்போனிற்கு தொடர்பு கொண்டு பேசிய ராஜதுரை என்பவர் “பிட் காயின்ஸ் மல்டிலெவல்” என்கிற பெயரில் ஆன்லைன் மார்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருவதாக கூறினார்.

எங்களது நிறுவனத்தில் பணம் கட்டி உறுப்பினராக சேர்ந்தால் தினமும் ரூ.2240 வீதம் 2 வருடங்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று ஆசை வார்த்தை கூறினார்.

பின்னர் சுவேதா என்பவரும் தொடர்ந்து என்னிடம் செல்போனில் பேசி பணம் கட்ட சொல்லி வற்புறுத்தினார். இதை உண்மை என்று நம்பி ரூ.1 லட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை ரொக்கமாக சுவேதாவிடம் கொடுத்தேன்.

ஆனால் இதுவரை அவர்கள் சொன்னபடி பணம் எனது வங்கி கணக்கிற்கு வரவில்லை எனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டபோது பணத்தை தரமுடியாது என்று கூறிய சுவேதா, ராஜதுரை, கார்த்திக், முருகேசன் ஆகியோர் என்னை மிரட்டி வருகிறார்கள்.

பண மோசடியில் ஈடுபட்ட 4 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை பெற்று தர வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News