செய்திகள்
தேர்தல் ஆணையர் பழனிசாமி

5 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்-தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவிப்பு

Published On 2019-12-15 11:20 GMT   |   Update On 2019-12-15 11:20 GMT
5 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேர்களை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நியமனம் செய்துள்ளார்.

சென்னை:

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கடந்த 9-ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். நாளை மாலை 3 மணியுடன் மனு தாக்கல் நிறைவடைகிறது.

அரசியல் கட்சிகள் கூட்டணி பங்கீட்டை முடித்து வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அவர்கள் அனைவரும் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

எனவே நாளை மனு தாக்கல் செய்யும் இடங்களில் கூட்டம் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பு மனுக்கள் நாளை மறுநாள் 17-ந் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெற 19-ந் தேதி கடைசி நாளாகும்.

இதையொட்டி முதற்கட்ட மாக 5 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேர்களை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நியமனம் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம்; காமராஜ், நாகை மாவட்டம்; ஞானசேகரன், நாமக்கல் மாவட்டம்; ஜெகநாதன், ராமநாதபுரம் மாவட்டம்; அதுல் ஆனந்த், நீலகிரி மாவட்டம்; ஜோதி நிர்மலா.

மற்ற மாவட்டங்களுக்கு விரைவில் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க தேர்தல் பார்வையாளர்கள் உதவுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News