செய்திகள்
வைகோ

3 வழக்கு விசாரணை: எழும்பூர் கோர்ட்டில் வைகோ ஆஜர்

Published On 2019-10-22 10:01 GMT   |   Update On 2019-10-22 10:01 GMT
3 வழக்கு விசாரணைக்காக எழும்பூர் கோர்ட்டில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆஜரானார்.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எழும்பூர் 2-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எம்பி, எம்எல்ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்) ஆஜரானார்.

நக்கீரன் கோபால் கைதின் போது சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டம், எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம், மெரீனாவில் தடையை மீறி ஊர்வலம் ஆகிய 3 வழக்கின் விசாரணைக்காக இன்று வைகோ நீதிமன்றத்தில் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை 3 வழக்கு விசாரணையையும் அடுத்த மாதம் 13ம்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். எம்பி, எம்எல்ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

3 வழக்குகளில் நான் ஆஜராகி உள்ளேன். 3 வழக்குகளும் நவம்பர் 13-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. முல்லை பெரியாறு பிரச்சினை தொடர்பாக முதல்வர் நேரிடையாக பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. இந்திய பொருளாதார நிலை மந்த நிலையில் உள்ளது. பொருளாதார மேதைகள் கூறும் அறிவுரைகளை மத்திய அரசு கேட்டு கவனம் செலுத்த வேண்டும்.

ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசிய சர்ச்சை பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை. 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்தது மிகவும் தவறானது. நிராகரிப்பது அரசியல் சட்டத்தில் அதிகார மில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News