செய்திகள்
பள்ளிப்பட்டு அருகே கீழ்க்கால்பேட்டையில் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கிராம மக்களுக்கு எச்சரிக்கை

Published On 2019-09-20 06:28 GMT   |   Update On 2019-09-20 06:28 GMT
ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து நேற்று இரவு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதேபோல ஆந்திர மாநிலத்தில் பலத்த மழை கொட்டியது. இதனால் ஆந்திர மாநிலத்தில் உள்ள அம்மம்பள்ளி அணை நிரம்பியது.

இதையடுத்து அம்மம்பள்ளி அணையில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

இதனால் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பள்ளிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களை சேர்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கீழ்கால்பேட்டை பகுதியில் தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து நேற்று இரவு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

வெளியகரம், நெடியம், சாமந்தவாடா தரைப்பாலத்துக்கு மேல் தண்ணீர் செல்வதால் இரவு நேரத்தில் பாலத்தை கடக்க முயல வேண்டாம். பாதுகாப்பு பணியில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் பொதுப் பணித்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News