செய்திகள்
தங்கம்

ஏறிக்கொண்டே செல்லும் தங்கம் விலை

Published On 2019-09-05 06:52 GMT   |   Update On 2019-09-05 06:52 GMT
சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.30 ஆயிரத்து 24-க்கு விற்பனையாகிறது.

சென்னை:

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. கடந்த 13-ந்தேதி பவுனுக்கு ரூ.29 ஆயிரத்தை தாண்டியது.

இதையடுத்து தங்கம் பவுனுக்கு ரூ.30 ஆயிரத்தை விரைவில் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ரூ.30 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

நேற்று காலை பவுனுக்கு ரூ.288 உயர்ந்து தங்கம் விலை ரூ.30 ஆயிரத்து 120-க்கு விற்றது. ஆனால் மாலையில் சற்று விலை குறைந்தது. பவுன் 29,928-க்கு விற்பனை ஆனது.

இந்த நிலையில் இன்று காலை தங்கம் பவுனுக்கு மீண்டும் ரூ.30 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.96 அதிகரித்து ரூ.30 ஆயிரத்து 24-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.30 ஆயிரத்து 753-ஆக உள்ளது.

நேற்று மாலை ரூ.30 ஆயிரத்துக்குள் சென்ற தங்கம் விலை இன்று காலை மீண்டும் உயர்ந்து ரூ.30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த 5 நாட்களில் பவுனுக்கு ரூ.496 உயர்ந்து இருக்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்தது. ஒரு கிலோ வெள்ளி ரூ.55 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் ரூ.55-க்கு விற்கிறது.

Tags:    

Similar News