செய்திகள்
காய்கறி விலை (கோப்புப்படம்)

முகூர்த்த பண்டிகை-விநாயகர் சதுர்த்தி விழா: காய்கறி- பூ- பழங்கள் விலை உயர்வு

Published On 2019-08-31 06:54 GMT   |   Update On 2019-08-31 07:03 GMT
முகூர்த்த பண்டிகை, விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் காய்கறி, பூ, பழங்கள் விலை உயர்ந்துள்ளது.
சென்னை:

முகூர்த்த பண்டிகை, விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் காய்கறி, பூ, பழங்கள் விலை உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் இன்று 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கேரட், பீன்ஸ், ரூ.60-ல் இருந்து ரூ.90-க்கு விலை உயர்ந்துள்ளது.

உருளைக்கிழங்கு 20 ரூபாயில் இருந்து ரூ.30-க்கும், முள்ளங்கி, பீட்ரூட் ரூ.40-ல் இருந்து ரூ.60-க்கும் விலை உயர்ந்துள்ளது.

சவ்சவ் கிலோ ரூ.50, பாகற்காய் ரூ.60, வாழைத்தண்டு ரூ.50-க்கும், விற்கப்படுகிறது.

வெங்காயம் கிலோ ரூ.30-ல் இருந்து ரூ.50-க்கு விலை உயர்ந்து விட்டது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்கப்படுகிறது.

தக்காளி மட்டும் விலை குறைந்துள்ளது. நாட்டு தக்காளி 1 கிலோ ரூ.20-க்கும் நவீன் தக்காளி ரூ.30-க்கும் விற்கப்படுகிறது.

ஆப்பிள் (உள்நாடு) கிலோ ரூ.120, ராயல் கலா ஆப்பிள் ரூ.320, வாஷிங்டன் ஆப்பிள் ரூ.250, சாத்துக்குடி ரூ.60, மாதுளம் ரூ.120, பெரிய மாதுளம் பழம் கிலோ ரூ.180, பூவன் வாழைப்பழம் ரூ.50-க்கு விற்பனையாகிறது.

கொய்யாப்பழம் கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.80-க்கு உயர்ந்துள்ளது. பேரிக்காய் ரூ.100, வெளிநாட்டு பேரிக்காய் ரூ.280-க்கு விற்கப்படுகிறது.

மல்லிகைப்பூ 300 கிராம் 150 ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது. வீதிகளில் ஒரு முழம் பூ 40 ரூபாய்க்கு விற்கிறார்கள். சாமந்தி, ரோஸ் கிலோ ரூ.40-ல் இருந்து ரூ.120-க்கு விலை உயர்ந்து விட்டது.

கனகாம்பரம், முல்லை 300 கிராம் 70 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.

இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், விசே‌ஷ தினங்கள் முடிந்து செவ்வாய்க்கிழமைக்கு பிறகு விலை குறையும் என்று தெரிவித்தனர்.
Tags:    

Similar News