செய்திகள்
மருத்துவ படிப்பு

எம்.பி.பி.எஸ். படிப்பு: மத்திய அரசுக்கு ஒதுக்கிய 150 இடங்கள் திரும்ப ஒப்படைப்பு

Published On 2019-07-28 11:03 GMT   |   Update On 2019-07-28 12:44 GMT
மத்திய அரசு திரும்ப கொடுத்துள்ள 150 எம்பிபிஎஸ் இடங்களை 2-வது கவுன்சிலிங் மாணவர் சேர்க்கையின்போது நிரப்பப்பட உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களில் குறிப்பிட்ட சதவீத இடங்கள் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் 15 சதவீத இடங்கள் மத்திய அரசு கோட்டாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் 550 இடங்கள் மத்திய அரசிடம் உள்ளது. இவற்றுக்கு மத்திய அரசே தேர்வு நடத்தி நிரப்பும்.

இந்த கோட்டாவில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை முழுவதும் நிரப்பப்படாமல் காலியாகவும் சில இடங்கள் இருக்கும். அதை மாநில அரசுக்கு மத்திய அரசு திருப்பி கொடுத்துவிடும்.

அந்த வகையில் 2017-ம் ஆண்டு 107 இடங்களும். கடந்த ஆண்டு 98 இடங்களும் தமிழகத்துக்கு திரும்ப கிடைத்தது. இந்த ஆண்டு 150 -க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்களை தமிழக அரசுக்கு திரும்ப ஒப்படைத்துள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளது.

இப்போது 2-வது கட்ட கவுன்சிலிங் வருகிற செவ்வாய்க்கிழமை (30-ந்தேதி) தொடங்கி 1-ந்தேதி வரை நடக்கிறது. அதில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 146 இடங்களுக்கும் 2-வது நிலை கல்லூரிகளுக்கு 48 இடங்களுக்கும் தனியார் கல்லூரிகளில் 69 இடங்களுக்கு, மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில் மத்திய அரசு திரும்ப கொடுத்துள்ள 150 இடங்களும் 2-வது கவுன்சிலிங் மாணவர் சேர்க்கையின்போது நிரப்பப்பட உள்ளது.

Tags:    

Similar News