செய்திகள்
முல்லைப் பெரியாறு அணை

தொடர் மழை - முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு

Published On 2019-07-22 04:44 GMT   |   Update On 2019-07-22 04:44 GMT
தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 114 அடியை நெருங்கி உள்ளது.
கூடலூர்:

கேரளாவில் பருவமழை பொய்த்ததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இதனால்கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக நெல்சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

நீண்ட நாட்களாக அணையின் நீர்மட்டம் 112 அடியிலேயே இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து நீர்மட்டம் 113.60 அடியாக உள்ளது.

இன்று மாலைக்குள் 114 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு 1273 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

இதன் காரணமாக வைகை அணைக்கு 144 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 28.12 அடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக நேற்று வரை 40 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி நீர்திறப்பு 60 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.50 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.35 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிற நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 23.2, தேக்கடி 16, கூடலூர் 15, சண்முகநதி அணை 11, உத்தமபாளையம் 2.1 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News