செய்திகள்
கோப்புப்படம்

பள்ளி மாணவியை 7 மாத கர்ப்பிணியாக்கிய ஐடிஐ மாணவர் - போக்சோ சட்டத்தில் கைது

Published On 2019-06-28 05:56 GMT   |   Update On 2019-06-28 05:56 GMT
தஞ்சை அருகே பள்ளி மாணவியை ஐடிஐ மாணவர் கர்ப்பிணியாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வல்லம்:

தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று வழக்கம் போல வீட்டில் இருந்து பள்ளி சென்றுள்ளார்.

பள்ளியில் மாணவி திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்து உள்ளார். இதை பார்த்து சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி ஆசிரியைகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியை ஆசிரியைகள் மீட்டு சிகிச்சைக்காக வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு மாணவி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாணவி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்த தகவல் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மாணவியிடம் விசாரணை நடத்தினார்.

போலீசார் நடத்திய விசாரணையில், தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. மாணவர் குமார் (வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பல முறை உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமடைந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து பள்ளி மாணவி கொடுத்த புகாரின் பேரில் ஐடிஐ மாணவர் மீது போக்சோ சட்டத்தின கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News