செய்திகள்

தென்சென்னை கூடுதல் கமி‌ஷனராக பிரேம் ஆனந்த் சின்கா நியமனம்

Published On 2019-06-26 10:32 GMT   |   Update On 2019-06-26 10:32 GMT
வட சென்னை போலீஸ் இணை கமி‌ஷனராக இருந்த பிரேம் ஆனந்த் சின்கா பதவி உயர்வு பெற்று தென் சென்னை கூடுதல் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் 26 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டிவெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தென் சென்னை கூடுதல் கமி‌ஷனராக இருந்த மகேஷ் குமார் அகர்வால் பதவி உயர்வு பெற்று அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வட சென்னை போலீஸ் இணை கமி‌ஷனராக இருந்த பிரேம் ஆனந்த் சின்கா பதவி உயர்வு பெற்று தென் சென்னை கூடுதல் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை நிர்வாக பிரிவு ஐ.ஜி. வெங்கட்ராமன் பதவி உயர்வு பெற்று சைபர்கிரைம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாகியுள்ளார். நவீன மயமாக்கல் பிரிவு ஐ.ஜி. வினித் தேவ் வான்கடே பதவி உயர்வுடன் மாநில குற்ற ஆவணகாப்பக கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு டி.ஜி.பி.யாக பணிபுரிந்த கரன்சின்கா, பயிற்சி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சேலம் டி.ஐ.ஜி. செந்தில் குமார், பதவி உயர்வு பெற்று சேலம் கமி‌ஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றிய சங்கர் சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி.யாகியுள்ளார். சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. ஸ்ரீதர், நவீன மயமாக்கல் பிரிவுக்கு மாறுதலாகி உள்ளார்.

வேலூர் டி.ஐ.ஜி. வனிதா ரெயில்வேக்கும், வட சென்னை போக்குவரத்து இணை கமி‌ஷனர் நஜ்முல் கோடா, கரூர் காதிக ஆலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை கமி‌ஷனர் அன்பு, பதவி உயர்வுடன் நிர்வாக பிரிவு ஐ.ஜி.யாக பணியமர்த்தப்பட்டுள்ளார். வண்டலூர் போலீஸ் அகாடமி டி.ஐ.ஜி. மகேந்தர் குமார் ரத்தோட், பதவி உயர்வு பெற்று அங்கேயே ஐ.ஜி.யாகியுள்ளார்.

உளவு பிரிவு (உள்நாட்டு பாதுகாப்பு) ஐ.ஜி. ஈஸ்வர மூர்த்தி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமி‌ஷனராகியுள்ளார். நெல்லை டி.ஐ.ஜி.யாக பிரவின்குமாரும், அங்கு பணியாற்றிய கபில் குமார் சென்னை போக்கு வரத்து வடக்கு இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் டி.ஐ.ஜி.யாக ரூபேஸ்குமார் மீனாவும், வேலூர் டி.ஐ.ஜி.யாக காமினியும், மதுரை டி.ஐ.ஜி.யாக ஆனிவிஜயாவும் சேலம் டி.ஐ.ஜி.யாக பிரதீப் குமாரும், பயிற்சி பள்ளி டி.ஐ.ஜி.யாக சத்திய பிரியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரெயில்வே டி.ஐ.ஜி.யாக இருந்த பாலகிருஷ்ணன், திருச்சி டி.ஐ.ஜி.யாகியுள்ளார். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.ஐ.ஜி.யாக லலிதா லட்சுமியும், தென் சென்னை போக்குவரத்து இணை ஆணையராக எஜிலரசனேவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு சென்னை இணை கமி‌ஷனராக சுதாகரும், போக்குவரத்து இணை ஆணையராக ஜெயகவுரியும், உளவு பிரிவு டி.ஐ.ஜி கண்ணன், உள்நாட்டு பாதுகாப்பு உளவு பிரிவிலும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News