செய்திகள்

சென்னையில் மிளகாய் பொடி தூவி கொள்ளையடித்த 7 பேர் கைது

Published On 2019-06-19 06:46 GMT   |   Update On 2019-06-19 06:46 GMT
சென்னையில் மிளகாய் பொடி தூவி கொள்ளையடித்த 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

சென்னை நகரில் கொத்தவால் சாவடி, பூங்காநகர், பாரிமுனை, பூக்கடை பகுதியில் ஒரு கும்பல் மிளாய் பொடி தூவி வழிப்பறி செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், பூக்கடையில் நின்று கொண்டிருந்த நர்சு ஒருவரிடம் மிளகாய் பொடி தூவி பணம், செல்போன் ஆகியவற்றை சிலர் பறித்தததாக புக்கடை போலீசுக்கு புகார் வந்தது. இதுபோல் பூங்காநகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரிடமும் மிளகாய் பொடி கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியது.

இதுகுறித்து பூங்கா நகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். வழிப்பறி கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

பூங்காநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேரை பிடித்து விசாரித்தனர்.


அப்போது இந்த கும்பல் தான் சென்னையில் மிளகாய் பொடி தூவி வழிப்பறி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ராயபுரம், வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த நாகூர் மீரான், ஆதி, கவுதம், டேனியல் சாலமன் இவர்களின் கூட்டாளிகளான தேவராஜ், ஷாஜகான், அஸ்ருதீன் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், பணம், பட்டா கத்திகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. ஹவாலா பணம் கொண்டு செல்வோரிடம் இவர்கள் கைவரிசை காட்டி வந்ததாகவும், இது குறித்து போலீசுக்கு புகார் வராததால் இந்த கும்பல் சுதந்திரமாக சுற்றித் திரிந்ததும் தெரிய வந்தது.

கைதான 7 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News