செய்திகள்

சோழிங்கநல்லூரில் தகவல் தொழில்நுட்பவியல் கட்டிடம் - எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

Published On 2019-03-06 09:39 GMT   |   Update On 2019-03-06 09:39 GMT
சோழிங்கநல்லூரில் தகவல் தொழில்நுட்பவியல் கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். #EdappadiPalaniswami

சென்னை:

மதுரை மாவட்டம், வட பழஞ்சி கிராமத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (எல்கோசெஸ்) 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் நிர்வாகக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இப்புதிய தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் நிர்வாகக் கட்டடமானது தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 71,482 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

மேலும், இக்கட்டிடம் தீயணைப்பு வசதி, குளிர்சாதன வசதி, மின் தூக்கிகள், ஜெனரேட்டர், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த வணிகத்தை சென்னையில் தொடங்க ஏதுவாக, சோழிங்கநல்லூரில் தகவல் தொழில்நுட்பவியல் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், 83 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பவியல் கட்டிடத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் மற்றும் அரவக்குறிச்சி வருவாய் வட்டங்களை சீரமைத்து, வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புகளூர் வருவாய் வட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். #EdappadiPalaniswami

Tags:    

Similar News