செய்திகள்

காய்ச்சல் காரணமாக பொள்ளாச்சியில் ஒரே நாளில் 110 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2018-11-13 05:17 GMT   |   Update On 2018-11-13 05:17 GMT
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் 30 குழந்தைகள் உள்பட 110 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Fever
கோவை:

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பன்றி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 மாதங்களில் 35-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி தாலுகா பகுதிகளில் ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் 30 குழந்தைகள் உள்பட 110 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 10 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளது. இவர்களை தனி வார்டில் சேர்த்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதே போல திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டரா பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ராயம்பாளையத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவனை அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். காமராஜர் நகரை சேர்ந்த 3 சிறுமிகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சேவூரில் ஒரே வீட்டில் வசிக்கும் 14 வயது சிறுமி, அவரது சகோதரன் ஆகியோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல மேட்டுப்பாளையம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் மர்ம காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Fever

Tags:    

Similar News