செய்திகள்
பேனாக்களையும், அதில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கத்தையும் படத்தில் காணலாம்.

திருச்சி வந்த விமானத்தில் ரூ.19 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2018-10-31 05:01 GMT   |   Update On 2018-10-31 05:01 GMT
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பேனாக்களில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #TrichyAirport
திருச்சி:

திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வந்தது. இதற்கு உடந்தையாக இருந்த விமான நிலைய ஊழியர்கள் சிலரை சமீபத்தில் சி.பி.ஐ. கைது செய்தது.

இதையடுத்து கடந்த சில மாதங்களாக தங்கம் கடத்தல் சம்பவம் குறைந்திருந்தது. இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு திருச்சிக்கு ஸ்கூட் என்ற தனியார் விமானம் வந்தது. அதிலிருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக சோதனை போட்டனர்.

அப்போது சென்னையை சேர்ந்த நாராயணன் என்ற பயணியிடம் சோதனை செய்தனர். அவரது நடவடிக்கையில் தொடர்ந்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடைமைகளை சல்லடை போட்டு சோதித்தனர். அவர் தனது கைப்பையில் வைத்திருந்த பேனாக்களை நவீன கருவிகள் மூலம் ஸ்கேன் செய்தபோது அதில் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று அவர் கொண்டு வந்த பேனாக்களில் இருந்து 599 கிராம் எடை கொண்ட ரூ.19 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தங்கம் கடத்தி வந்த சென்னையை சேர்ந்த நாராயணனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #TrichyAirport
Tags:    

Similar News