செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

Published On 2018-10-06 07:44 GMT   |   Update On 2018-10-06 07:44 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.24,064-க்கு விற்பனையாகிறது. #Gold
சென்னை:

பல மாதங்களாக பவுன் ரூ.23 ஆயிரத்துக்குள் தங்கம் விலை இருந்தது. இந்த நிலையில் இன்று ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. கடந்த (செப்டம்பர்) மாதம் பவுன் ரூ.23 ஆயிரத்து 232 ஆக இருந்தது.

பின்னர் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. 4-ந்தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 792 ஆக இருந்தது. நேற்று முன்தினம் ரூ.112 அதிகரித்து ரூ.23 ஆயிரத்து 904-க்கு விற்றது.

இன்று அதிரடியாக பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்து 64 ஆக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை பவுன் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.3008-க்கு விற்கிறது.

அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. அதன் தாக்கம் இந்தியாவிலும் பிரதிபலிப்பதால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதனால் தங்கம் விலை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பங்கு சந்தையை விட தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பும் விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்துள்து. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 900 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.41.90-க்கு விற்கிறது. #Gold
Tags:    

Similar News