செய்திகள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.336 உயர்வு

Published On 2018-10-03 07:39 GMT   |   Update On 2018-10-03 07:39 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ஒரு சவரன் ரூ.23,840-க்கு விற்பனையாகிறது. #Gold
சென்னை:

கடந்த மாதம் (செப்டம்பர்) 24-ந்தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 488 ஆக இருந்தது. மறுநாள் ரூ.56 விலை உயர்ந்து பவுன் ரூ.23 ஆயிரத்து 544-க்கு விற்றது. தொடர்ந்து விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது.

நேற்று பவுனுக்கு ரூ.184 அதிகரித்து ரூ.23 ஆயிரத்து 504 ஆக இருந்தது. இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. அதிரடியாக பவுனுக்கு ரூ.336 அதிகரித்துள்ளது.

ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 840 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.42 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,980-க்கு விற்கிறது.

கடந்த 2 நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் ஓரிருநாளில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.24 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. அதனால் இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. இன்று இந்திய ரூபாயின் மதிப்பு கடும் விழ்ச்சி அடைந்தது. அதன் காரணமாக தங்கம் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளதும் விலை உயர்வுக்கு காரணமாக கருதப்படுகிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ,,1900 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.42 ஆயிரம் ஆக உள்ளது. ஒரு கிராம் 42 ரூபாய்க்கு விற்கிறது. #Gold
Tags:    

Similar News