செய்திகள்

பெட்ரோல் கட்டண உயர்வால் தமிழக அரசுக்கு ஒரே மாதத்தில் ரூ.470 கோடி வருவாய் அதிகரிப்பு

Published On 2018-09-26 08:41 GMT   |   Update On 2018-09-26 08:41 GMT
பெட்ரோல் கட்டண உயர்வால் தமிழக அரசுக்கு ஒரே மாதத்தில் ரூ.470 கோடி வருவாய் அதிகரித்துள்ளது. #PetrolDiesel #PetrolPriceHike

சென்னை:

சர்வதேச விலைக்கு ஏற்ப இந்தியாவிலும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் தினமும் அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. தற்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.90-ஐ நெருங்கும் நிலையில் உள்ளது.

பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தும் போது மத்திய-மாநில அரசுகளின் வாட் வரியும் அதிகரிக்கிறது. இதனால் மத்திய-மாநில அரசுகளுக்கு கூடுதலாக வரி வருவாய் கிடைக்கிறது.

தமிழக அரசுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ. 470 கோடிக்கு கூடுதலாக வரி வருவாய் கிடைத்துள்ளது.


கடந்த 2017 ஆகஸ்ட் மாதத்துடன் வரி வருவாய் ரூ. 2,255.80 கோடியாக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை லிட்டர் ரூ.67.71 ஆக இருந்தது. இபோது பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 80-ஐ தாண்டிய நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் வரி வருவாய் ரூ.2,725.80 கோடியாக அதிகரித்துள்ளது.

இதன்மூலம் ரூ.500 கோடி கூடுதல் வரி வருவாய் கிடைத்துள்ளது. தமிழக அரசு பெட்ரோலிய பொருட்களின் மீது 32 சதவீத வாட் வரி விதிக்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி. அமல் படுத்தப்பட்டபின்பு தமிழகத்தில் பெட்ரோலிய பொருட்கள் விற்பனை மற்றும் மது விற்பனை ஆகியவற்றுக்கு மட்டுமே வாட் வரி விதித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. #PetrolDiesel #PetrolPriceHike

Tags:    

Similar News