செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளிக்கு மாணவர்கள் பூட்டு

Published On 2018-06-19 05:45 GMT   |   Update On 2018-06-19 05:45 GMT
ஆண்டிப்பட்டி அருகே தலைமை ஆசிரியரின் முறைகேட்டை கண்டித்து மாணவர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வரு‌ஷநாடு சிங்கராஜபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 120 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக ஸ்ரீமதி என்பவரும், 7 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 2 வருடமாக பள்ளிக்கு வந்த நிதியை தலைமை ஆசிரியர் முறையாக பயன்படுத்தாமல் தனது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தி வந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இருந்த போதும் நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று தலைமை ஆசிரியரிடம் பள்ளி ஆசிரியர் இது குறித்து கேட்டார். இதனால் அந்த ஆசிரியர் வேறு இடத்துக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த மற்ற ஆசிரியர்களும், மணவ-மாணவிகளும் பெற்றோர்களும் இன்று பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் இதே பள்ளியில் அமர்த்த வேண்டும்.

புகாரில் சிக்கியுள்ள தலைமை ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாணவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. #tamilnews

Tags:    

Similar News