செய்திகள்

சுகாதார மையத்தில் பதிவு செய்யும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ உதவிகள் - சென்னை மாநகராட்சி

Published On 2018-06-15 08:35 GMT   |   Update On 2018-06-15 08:35 GMT
சுகாதார மையத்தில் பதிவு செய்யும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. #ChennaiCorporation #HealthCenter

சென்னை:

சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தங்களின் கர்ப்ப கால விவரங்களை நேரடியாக பொது சுகாதாரத்துறையின் கர்ப்பம், குழந்தை வளர்ப்பு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு என்ற மென் பொருள் மூலமாக பதிவு செய்யலாம்.

மேலும், 102 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும், அரசு இ/சேவை மையத்தின் மூலமும், தாங்களாகவே https://picme.tn.gov.in/picme_public என்ற இணையதளத்தில் பதிவு செய்தும் பதிவு எண்ணைப் பெறலாம். அதனைத் தொடர்ந்து நகர சுகாதார செவிலியர் ஒருவார காலத்திற்குள் கர்ப்பிணிகள் பதிவு செய்த விவரங்களைக் கொண்டு, பதிவு செய்து அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளலாம்.

குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கும் கர்ப்பம், குழந்தை வளர்ப்பு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு பதிவு எண் மிகவும் அவசியம்.

நகர சுகாதார செவிலியரிடம் கர்ப்ப விவரங்களை பதிவு செய்தால், கர்ப்பக் கால, பிரசவகால மற்றும் தடுப்பூசி சேவைகள் குறித்த நினைவூட்டல் குறுஞ்செய்திகள் பெற முடியும்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். மேலும், குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் எளிதாக இணையதளத்திலிருந்து பெற, பதிவு செய்த அடையாள அட்டை மிகவும் அவசியம்.

இதனை பற்றிய மேலும் விவரங்களுக்கு

picmehelpdesk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். #ChennaiCorporation #HealthCenter

Tags:    

Similar News