search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதார மையம்"

    • அனைவருக்கும் சுகாதார வசதி திட்டத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
    • மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை வெற்றிகரமாக அடைந்து விட்டதாக பிரதமர் பாராட்டு

    நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில்  டிசம்பர் 31 ஆம் தேதி (இன்று) க்குள் 1,50,000 ஆயுஷ்மான் பாரத் சுகாதார மையங்களை அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது.

    நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பே இந்த சாதனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தியா தான் நினைத்த இலக்கை வெற்றிகரமாக அடைந்துவிட்டதாகவும், இந்த சாதனைக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 


    மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியால், பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை யதார்த்தமாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பிரதமர் மோடி இந்த சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆயுஷ்மான் சுகாதார மையங்கள் நாடு முழுவதும் மக்கள் ஆரம்ப சுகாதார வசதிகளை எளிதாக பெற உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்காக நாடு முழுவதும் 86.90 கோடிக்கும் அதிகமானோர் ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • பலமுறை நினைவூட்டியும் மருத்துவ மையங்களை சரி செய்யாததால் வாரியம் இந்த கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
    • சுகாதார மையங்களுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்துமாறு மின் விநியோக நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்படும்.

    பீகார் மாநிலத்தில் மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாத 1800 சுகாதார மையங்களை மூட அம்மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அசோக் குமார் கோஷ் கூறியதாவது:-

    விதிகளை பின்பற்றி மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாத 1800 சுகாதார மையங்கள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 1800 சுகாதார மையங்களுக்கு இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மையங்கள் அகற்றுவதற்கு அமைக்கப்பட்ட விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீண்டும் பின்பற்றாதபட்சத்தில் சுகாதார மையங்கள் மூட உத்தரவு பிறப்பிக்கப்படும்.

    மேலும் இந்த சுகாதார மையங்களுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்துமாறு மின் விநியோக நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்படும்.

    இதுகுறித்து பலமுறை நினைவூட்டியும் மருத்துவ மையங்களை சரி செய்யாததால் வாரியம் இந்த கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

    சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவ மையங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 38 ஆயிரத்து 462 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    • அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள் உள்பட 1,459 பகுதிகளில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இருந்தன.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 37-வது மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.

    இதற்காக மதுரை மாவட்டத்தில் அனைத்து வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்பட 1,459 பகுதிகளில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இருந்தன.

    கிராமப்புற பகுதிகளில் 909 மையங்களும், மாநகரில் 550 மையங்களும் ஏற்படுத்தப்பட்டன. மதுரை மாவட்டத்தில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த 2லட்சத்து 20 ஆயிரத்து 256 பேர் தகுதி பெற்று இருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 498 பேர் ஊரக பகுதிகளிலும், 1லட்சத்து12 ஆயிரத்து 758 பேர் மாநகர பகுதிகளிலும் வசிப்பது தெரிய வந்தது.

    அதே போல மதுரை மாவட்டத்தில் 11லட்சத்து 63 ஆயிரத்து 107 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டி இருந்தது. அவர்களில் 5 லட்சத்து 90 ஆயிரத்து 374 பேர் கிராமங்களிலும், 5லட்சத்து 72 ஆயிரத்து 733 பேர் மாநகரிலும் பகுதிகளிலும் வசிப்பது தெரியவந்தது.

    தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் பள்ளி, கல்லூரி என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் ஒருங்கிணைந்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்தாத பயனாளிகளை கண்டறிந்து சிறப்பு முகாம்களுக்கு அழைத்து வந்தனர்.

    மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 38 ஆயிரத்து 462 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கிராமப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் முதல் டோஸ்: 530, 2-ம் டோஸ்: 2968, பூஸ்டர் டோஸ்: 11 ஆயிரத்து 76 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் முதல் டோஸ்: 269, 2-ம் டோஸ்: 9 ஆயிரத்து 315, பூஸ்டர் டோஸ்: 12 ஆயிரத்து 872 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    மதுரை அரசினர் மருத்துவமனையில் முதல் டோஸ்: 65, 2-ம் டோஸ்: 464, பூஸ்டர் டோஸ்: 810 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் முதல் டோஸ்: 9, 2-ம் டோஸ்: 6, பூஸ்டர் டோஸ்: 78 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நேற்றைய சிறப்பு முகாம் வாயிலாக முதல் டோஸ்: 873, 2-ம் டோஸ்: 12ஆயிரத்து 753, பூஸ்டர் டோஸ்: 24 ஆயிரத்து 836 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் சிறப்பு முகாம்கள் வாயிலாக 38 ஆயிரத்து 462 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சுகாதார நிலையம் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தார்.
    • நகரசபை தலைவி உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் மீரான் சேட் காலனியில் ரூ.75 லட்சம் மதிப்பில் பொது சுகாதார நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான உடற்பயிற்சிக் கூடம், யோகா நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நகரசபை தலைவி உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.

    நகர சபை ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் ஜெயப்பிரியா, சுகாதார அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொது சுகாதார நிலையம் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சோம செல்வ பாண்டியன், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் எம்.எஸ். ராஜ், துணை செயலாளர் குமார், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் டைட்டஸ் ஆதித்தன், ம.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் நடுவை முருகன்,

    காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் மனோகரன், தி.மு.க. நகர நிர்வாகி பிரகாஷ், நகரத் துணைச் செயலாளர் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள் மாரிச்சாமி, எஸ்.டி.எஸ். சரவணக்குமார், புனிதா, புஷ்பம், குருப்பிரியா மாவட்ட பிரதிநிதி செய்யது அலி, கேபிள் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×