செய்திகள்

புதுச்சேரியில் விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணிப்பு

Published On 2018-05-02 07:00 GMT   |   Update On 2018-05-02 07:00 GMT
புதுச்சேரியில் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் விடைத்தாள் திருத்தும் பணிதாமதமானது. #Teachers #Protest

புதுச்சேரி:

கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தை போல் புதுவையிலும் வினாத்தாள் திருத்தும் பணி நடக்கிறது.

புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.இங்கு ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 8.30 மணிக்கு பணிக்கு வந்த ஆசிரியர்கள் திடீரென விடைத்தாள் திருத்தும் பணியை தொடங்காமல் பள்ளி வளாகத்திற்கு வெளியே ஒன்று கூடினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

கடந்த ஆண்டை விட இரு மடங்கு விடைத்தாள்களை புதுவைக்கு வந்திருப்பதாகவும் இதனால் ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை மற்றும் விடுமுறை நாட்களிலும் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு ஈட்டு விடுமுறை அளிக்க கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்தனர்.

கோரிக்கை குறித்து கல்வி துறை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாகும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பிறகு ஆசிரியர்கள் கலைந்து சென்றனர். இதனால் 30 நிமிடம் விடைத்தாள் திருத்தும் பணி தாமதமானது. #Teachers #Protest

Tags:    

Similar News