செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர் ரெயில் போராட்டம் - பி.ஆர்.பாண்டியன்

Published On 2018-04-22 04:11 GMT   |   Update On 2018-04-22 04:11 GMT
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் தொடர் ரெயில் போராட்டம் நடத்தப்படும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார். #CauveryIssue #CauveryMangementBoard
திருச்சி:

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் காவிரி உரிமை மீட்பு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜ.க., ஒரு சில தலைவர்களை சதி திட்டத்தில் ஈடுபடுத்தி வருகிறது. தமிழக அரசியல் கட்சிகள், பா.ஜ.க.வின் சதியை முறியடிக்க காவிரி போராட்டத்தை ஒன்றுபட்டு தீவிரப்படுத்த வேண்டும்.

இது தொடர்பான பரப்புரை பயணம் வருகிற 25-ந் தேதி முதல் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில், உப்பு சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கிய வேதாரண்யத்திலிருந்து தொடங்குகிறது. இப்பயணம் தஞ்சாவூர், கல்லணை, திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், மேட்டூர், தர்மபுரி, வேலூர், காஞ்சீபுரம், சென்னை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, காரைக்கால், நாகப்பட்டினம் வழியாக வருகிற 29-ந்தேதி மனுநீதி சோழன் நீதி கேட்ட திருவாரூர் நகரத்தில் நிறைவடையும்.

இந்த பயணத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மே 1-ந் தேதி முதல் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் முதல் திருவொற்றியூர் வரை ரெயில் பாதையில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.#CauveryIssue  #CauveryMangementBoard
Tags:    

Similar News