செய்திகள்

ஆரணியில் கூடுதல் விலைக்கு விற்றதால் கியாஸ் சிலிண்டர் லாரியை சிறைபிடித்து போராட்டம்

Published On 2018-03-23 04:57 GMT   |   Update On 2018-03-23 04:57 GMT
கூடுதல் விலைக்கு கியாஸ் சிலிண்டர் விற்பதை கண்டித்து ஏஜென்சி லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.

ஆரணி:

ஆரணி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர், அங்குள்ள தனியார் ஏஜென்சி மூலம் கியாஸ் சிலிண்டர் பெறுகின்றனர். ஒரு கியாஸ் சிலிண்டர் 718 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. இது அரசு நிர்ணயித்த விலை.

ஆனால், ஆரணியில் உள்ள ஏஜென்சி ஊழியர்கள் ஒரு கியாஸ் சிலிண்டரை ரூ.740 முதல் ரூ.750 வரை விற்கின்றனர். இதுகுறித்து கேட்கும் பொதுமக்களுக்கு கியாஸ் சிலிண்டரை தாமதப்படுத்தி வழங்குகின்றனர்.

கியாஸ் ஏஜென்சியின் இது போன்ற தவறான அணுகு முறையை கண்டித்து, இன்று காலை ஆரணி அடுத்துள்ள அக்ராபாளையத்தை சேர்ந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர், கியாஸ் சிலிண்டர் ஏற்றிவந்த லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடுதல் விலைக்கு கியாஸ் சிலிண்டரை விற்க கூடாது என வலியுறுத்தினர். அதன் பிறகு, ஏஜென்சி மேலாளர் போன் மூலம் கிராமத்தில் உள்ள பிரமுகர்களிடம் பேசி, 718 ரூபாய் கொடுத்தே சிலிண்டர் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

அதன்பிறகு, லாரியை பொதுமக்கள் விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews

Tags:    

Similar News