செய்திகள்
கொள்ளை சம்பவம் நடந்த தனியார் பெட்ரோல் பங்க்கில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

திருச்சி அருகே பெட்ரோல் பங்க்கில் கத்தி முனையில் ஊழியரிடம் ரூ.3 லட்சம் கொள்ளை

Published On 2018-03-16 11:26 GMT   |   Update On 2018-03-16 11:26 GMT
திருச்சி அருகே இன்று பெட்ரோல் பங்க்கில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள் ஊழியரிடம் கத்தி முனையில் ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
திருச்சி:

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அம்பேத்கார் நகரில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு ஷிப்ட் முறையில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 20) உள்பட 4 ஊழியர்கள் பணியில் இருந்தனர். இரவு நேரங்களில் குறைந்த அளவிலேயே வாகனங்கள் பெட்ரோல் நிரப்ப வருவது வழக்கம்.

எனவே மணிகண்டன் தவிர மற்ற 3 ஊழியர்கள் மற்றும் பங்க் மேலாளர் பிரகாசம் ஆகியோர் தனி அறையில் தூங்கி கொண்டிருந்தனர். மணிகண்டன் மட்டும் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் பணியில் இருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் அங்கு வந்தனர்.

ரூ.100-க்கும் பெட்ரோல் நிரப்பிய அவர்கள் ரூ.500 கொடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு மீதி பணம் கொடுப்பதற்காக பெட்ரோல் பங்க்கில் உள்ள கல்லாப்பெட்டியை திறந்தார். அப்போது 2 வாலிபர்களில் ஒருவன் மணிகண்டனை பின்தொடர்ந்து வந்து திடீரென கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தினான்.

இதனை சற்றும் எதிர்பாராத பங்க் ஊழியர் மணிகண்டன் அதிர்ச்சி அடைந்தார். கூச்சல் போட்டார் கொலை செய்துவிடுவதாக மிரட்டிய அந்த வாலிபர் மணிகண்டனிடம் இருந்து விற்பனை பணம் ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றனர். அவர்கள் தங்களை அடையாளம் காணாமல் இருப்பதற்காக முகத்தை துணியால் மூடியிருந்தனர்.

இதையடுத்து மணிகண்டன் நடந்த சம்பவம் குறித்து தூக்கத்தில் இருந்த மற்ற ஊழியர்களை எழுப்பி தெரிவித்தார். அதன்பேரில் பங்க் உரிமையாளர் பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே கொள்ளை சம்பவம் நடந்த பெட்ரோல் பங்க்கிற்கு வந்த நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகள் மூலம் விசாரணை நடத்தினார். அதே ப குதியை சேர்ந்தவர்கள்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
Tags:    

Similar News