செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2018-03-06 08:10 GMT   |   Update On 2018-03-06 08:10 GMT
திருச்சி விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கே.கே.நகர்:

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தனியார் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது ஜென்ரவி 95 கிராம் தங்கத்தையும், மயிலாடுதுறையை சேர்ந்த முகமது ரிஸ்வான் 465 கிராம் தங்கத்தையும் தங்களது உடைமைகளுக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.17 லட்சம் இருக்கும். மேலும் தங்கம் கடத்தல் தொடர்பாக 2 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையம் வழியாக பயணிகள் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பயணி ஒருவரிடம் இருந்து ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 2 பயணிகளிடம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #tamilnews
Tags:    

Similar News