செய்திகள்

நகராட்சி வரி உயர்வுக்கு எதிரான கடையடைப்பு போராட்டத்திற்கு காரைக்கால் மீனவர்கள் ஆதரவு

Published On 2018-02-20 03:21 GMT   |   Update On 2018-02-20 08:39 GMT
புதுச்சேரியில் நகராட்சி வரி உயர்வுக்கு எதிரான கடையடைப்பு போராட்டத்திற்கு காரைக்கால் மீனவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:

யூனியன் பிரதேசமான புதுவையில் ஜி.எஸ்.டி. வரி, குப்பை வரி, வீட்டு வரி, தொழில் வரி, நகராட்சி வரி போன்றவை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 20-ந்தேதி புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக வணிகர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வரி உயர்வுக்கு எதிரான கடையடைப்பு போராட்டத்திற்கு காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 11 கிராம மீனவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்னர்.

போராட்டத்தால், காரைக்கால் மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News