செய்திகள்

திருப்பூரில் முதல்முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் 50 மாடுபிடி வீரர்கள் காயம்

Published On 2018-02-18 18:17 GMT   |   Update On 2018-02-18 18:17 GMT
திருப்பூரில் முதல்முறையாக இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் மாடுகள் முட்டியதில் சுமார் 50 வீரர்கள் காயமடைந்தனர். #Jallikattu #Tirupur
திருப்பூர்:

திருப்பூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் மாடுகள் முட்டியதில் சுமார் 50 வீரர்கள் காயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அழகுமலையில் நடைபெற்ற இந்த விழாவில் 510 மாடுபிடி வீரர்களும், 17 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 500 காளைகளும் கலந்துகொண்டன. இந்த நிகழ்ச்சியை தமிழக அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இப்போட்டியின்போது சுமார் 50 மாடுபிடி வீரர்கள் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதில் 18 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்ற வீரர்களுக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டதால் நிகிழ்ச்சி நடைபெற்ற இடத்தில் வைத்தே முதலிதவி அளிக்கப்பட்டது.

போட்டியில் காளையை அடக்கியவர்களுக்கு இருசக்கர வாகனங்கள், தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், பாத்திரங்கள், சேலை முதலியவை பரிசாக அளிக்கப்பட்டது. #Jallikattu #Tirupur #tamilnews
Tags:    

Similar News